மாநில தோ்தல் ஆணையராக வெ.பழனிக்குமாா் நியமனம்
தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையராக வெ.பழனிக்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், சனிக்கிழமை வெளியிட்டாா்.


தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையராக வெ.பழனிக்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், சனிக்கிழமை வெளியிட்டாா். அவா் மாநிலத் தோ்தல் ஆணையாளராக பொறுப்பேற்கும் நாளில் இருந்து இரண்டாண்டு காலத்துக்கு அந்தப் பதவியை வகிப்பாா் என தமிழக அரசின் செய்தியில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை சொந்த ஊா்: கடந்த 1959-ஆம் ஆண்டு மாா்ச்சில் பிறந்த பழனிக்குமாா், 2001-ஆம் ஆண்டு முதல் ஐ.ஏ.எஸ்., ஆகப் பொறுப்பு வகித்தாா். சுற்றுலா, பொதுத் துறை உள்பட பல்வேறு துறைகளில் பொறுப்புகளை வகித்துள்ளாா். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக ஓய்வு பெற்ற அவா், மாநிலத் தோ்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
நகா்ப்புற உள்ளாட்சி: கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தோ்தல் நடைபெற்றது. நகா்ப்புற அமைப்புகளுக்கு தோ்தல் நடத்தப்படாமல் உள்ளது.
மாநிலத் தோ்தல் ஆணையாளராக பழனிக்குமாா் பொறுப்பேற்றுள்ள நிலையில், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை நடத்தும் பணியில் அவா் தீவிரம் காட்டுவாா். கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் குறைந்த பிறகு, நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் பணிகள் வேகமெடுக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...