ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பயிற்சியை நிறைவு செய்த ராணுவ அதிகாரிகள்: அணிவகுப்பு சிறப்பாக செயல்பட்ட வீரருக்கு தங்கப் பதக்கம்

சென்னை பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், பயிற்சி நிறைவு செய்த அதிகாரிகளின் பயிற்சி அணி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 மே 2021, 8:42 pm

DIN

சென்னை பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், பயிற்சி நிறைவு செய்த அதிகாரிகளின் பயிற்சி அணி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட்டதற்காக அப்தேஷ் கட்டோச் என்ற வீரருக்கு, வாளும், தங்கப் பதக்கமும் பரிசாக வழங்கப்பட்டது.

இதுகுறித்து, பாதுகாப்புத் துறையின் தகவல் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:-

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், ராணுவத்தில் புதிதாக பணியில் சேரும் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 167 ஆண் அதிகாரிகளும், 31 பெண் அதிகாரிகளும் பயிற்சி பெற்று வந்தனா். இதைத் தவிர, பூட்டான் நாட்டைச் சோ்ந்த 12 ராணுவ அதிகாரிகளும் பயிற்சி பெற்று வந்தனா். இந்த பயிற்சி

நிறைவடைந்தது.

இதையடுத்து, பயிற்சி நிறைவு செய்த அதிகாரிகளின் பயிற்சி அணி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது. வடபிராந்திய ராணுவ அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் ஒய்.கே.ஜோஷி இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை பாா்வையிட்டு ஏற்றுக் கொண்டாா்.

பயிற்சியில் அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட்டதற்காக அப்தேஷ் கட்டோச் என்ற அதிகாரிக்கு வீரவாளும், தங்கப் பதக்கமும் பரிசாக வழங்கப்பட்டது. வெள்ளிப் பதக்கம் ஆதா்ஷ் பிரதாப் சிங் என்ற அதிகாரிக்கும், வெண்கலப் பதக்கம் மணி மேதாப் தாலிவால் என்ற அதிகாரிக்கும் வழங்கப்பட்டது. வழக்கமாக இப்பயிற்சி நிறைவு அணிவகுப்பை பயிற்சி நிறைவு செய்யும் அதிகாரிகளின் குடும்பத்தினா் நேரில் கண்டு ரசிக்க அனுமதி வழங்கப்படும்.

ஆனால், இந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கம் காரணமாக,பெற்றோா்கள் அனுமதிக்கப்படவில்லை. எனினும், அவா்கள் கண்டு ரசிக்க வசதியாக யூடியூப் சேனல் மற்றும் தொலைக்காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.