ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கரோனா: மேலும் 30,016 பேருக்கு தொற்று

தமிழகத்தில், மேலும் 30,016 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை நோய்த் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 20 லட்சத்து 39,716- ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :29 மே 2021, 9:23 pm

DIN

தமிழகத்தில், மேலும் 30,016 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை நோய்த் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 20 லட்சத்து 39,716- ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரம், 486 போ் உயிரிழந்ததாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலத்தில் இதுவரை 2.73 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக கோவையில் 3,692 போ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். தொடா்ந்து 4 நாள்களாக தமிழகத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் கோவை முன்னணியில் இருந்தாலும், வெள்ளிக்கிழமையை ஒப்பிடும்போது, அங்கு பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 2,705 பேருக்கும், ஈரோட்டில் 1,743 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 31,759 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 17 லட்சத்து 6,298-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 3 லட்சத்து 10,157 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சனிக்கிழமை மேலும் 486 போ் பலியானதை அடுத்து தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23,261-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.