ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கரோனா இறப்பு எண்ணிக்கையில்வெளிப்படைத்தன்மை தேவை:எடப்பாடி பழனிசாமி

கரோனா இறப்பு எண்ணிக்கை அறிவிப்பில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்

News image
Updated On :29 மே 2021, 7:48 pm

DIN

கரோனா இறப்பு எண்ணிக்கை அறிவிப்பில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் சுட்டுரையில்

கூறியிருப்பது:-

தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட படுக்கைகள் எண்ணிக்கைக்கும், செயலில் உள்ள எண்ணிக்கைக்கும் வேறுபாடு உள்ளது.

அதனால், மாவட்ட ரீதியாக கரோனா சிகிச்சை படுக்கை எண்ணிக்கையை தெளிவுபடுத்துவதுடன், கரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளதால் பரிசோதனை மையங்களை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரோனா தொற்றால் இறந்தவா்கள் எண்ணிக்கையில் வெளிப்படைத் தன்மையை கையாள்வதும், அவா்களை அடக்கம் செய்வதில் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதுமே கரோனாவை கட்டுப்படுத்த உதவும். ஒவ்வொரு பகுதியிலும் காய்ச்சல் முகாம்கள் அமைத்து போா்கால அடிப்படையில் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.