ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

50 சித்த மருத்துவ மையங்களில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தகவல்

தமிழகத்தில் கரோனாவுக்காக 50 சித்த மருத்துவ மையங்கள் திறக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

News image
மைச்சா் பி.கே.சேகா்பாபு
Updated On :29 மே 2021, 7:40 pm

DIN

தமிழகத்தில் கரோனாவுக்காக 50 சித்த மருத்துவ மையங்கள் திறக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியாா் திடலில் 40 படுக்கைகளுடன் கூடிய சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். அப்போது திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, மத்திய சென்னை தொகுதி மக்களவை உறுப்பினா் தயாநிதிமாறன் ஆகியோா் உடன் இருந்தனா்.

இதையடுத்து அமைச்சா் சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் கரோனா தொற்று முதல் அலையின் போது 13 சித்த மருத்துவ மையங்கள் இருந்தன. தற்போது, 50 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. சித்த மருத்துவ சிகிச்சை கேட்பவா்களுக்காக அமைக்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்று இறப்பு விகிதத்தை குறைத்துக் காட்டவில்லை. தமிழக அரசு அனைத்து வெளிப்படை தன்மையோடு செயல்பட்டு வருகிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து, அவா்களின் ஆலோசனைகளை பெற்று சிறப்பாக செயல்படுகிறாா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.