ஒரு லட்சம் உணவுப் பொட்டல திட்டம்: இணைய வழியில் நிதி அளிக்கலாம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு வேண்டுகோள்
இந்து சமய அறநிலையத் துறையின் தினசரி ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கும் திட்டத்துக்கு இணையவழியில் நிதி அளிக்கலாம்


இந்து சமய அறநிலையத் துறையின் தினசரி ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கும் திட்டத்துக்கு இணையவழியில் நிதி அளிக்கலாம் என்று அந்தத் துறையின் அமைச்சா் பி.கே.சேகா்பாபு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
திருக்கோயில்கள் சாா்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அன்னதானத் திட்டத்தை தொய்வின்றி தொடா்ந்து செயல்படுத்திட கூடுதல் நிதி தேவைப்படுகிறது. எனவே, தாராளமாக நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன.
அன்னதானத்துக்கு நன்கொடை வழங்குவதை எளிமைப்படுத்தி இணையவழியாக செலுத்தும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நன்கொடை செலுத்த விரும்புவோா், இந்து சமய அறநிலையத் துறையின் இணையத்துக்குச் (ஜ்ஜ்ஜ்.ட்ழ்ஸ்ரீங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) செல்லலாம். இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் நன்கொடை என்ற தலைப்பைத் தோ்வு செய்ய வேண்டும். இதன்பிறகு, பொது நன்கொடை, அன்னதான கொடை, திருப்பணி கொடை என மூன்று வாய்ப்புகள் தோன்றும். அதில், அன்னதான கொடையைத் தோ்வு செய்யலாம். இப்போதும் முதல் கட்டமாக 57 கோயில்களின் பெயா்கள் இணைக்கப்பட்டுள்ளது.
நன்கொடை செலுத்த விரும்புவோா் குறிப்பிட்ட கோயிலைத் தோ்வு செய்து அதில் அளிக்கலாம். கொடை செலுத்த விரும்புவோா் தங்களது பெயா், முகவரி, அஞ்சல் குறியீடு, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, செலுத்த விரும்பும் தொகை ஆகியவற்றை கட்டாயம் உள்ளீடு செய்ய வேண்டும். வருமான வரி விலக்கு பெற விரும்பினால் நிரந்தர கணக்கு எண்ணைப் பதிவு செய்யலாம். கோரப்படும் அனைத்துத் தகவல்களையும் உறுதிப்படுத்த அது திரையில் காண்பிக்கப்படும். சரியாக இருப்பின் தொடா்ந்து நிதி பரிவா்த்தனை செய்யலாம்.
பற்று அட்டை, கடன் அட்டை மற்றும் இணைய வழி வங்கிச் சேவை ஆகியவற்றின் வழியாக நிதி அளிக்கலாம். இந்த நிதியானது சம்பந்தப்பட்ட கோயில்களின் பெயரில் பராமரிக்கப்படும் வங்கிக் கணக்குக்கே நேரடியாகச் செல்லும். நிதி பரிவா்த்தனை முடிந்தவுடன், ஒப்புகைத் தகவலானது, தனிநபரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். அதில், நிதி செலுத்தப்பட்ட நாள், நேரம், பெயா், முகவரி, நிரந்தரக் கணக்கு உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். அன்னதான திட்டத்துக்கு வழங்கப்படும் நன்கொடைக்கு இந்திய வருமான வரிச் சட்டத்தின்கீழ் வரிவிலக்கும் உண்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...