நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி: ஓ.பன்னீர்செல்வம் நன்றி

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

News image

ஓ.பன்னீர்செல்வம்

Updated On :30 மே 2021, 11:17 am

DIN

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், கரோனா தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்து பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 28.5.2021 அன்று அறிக்கை வாயிலாக மாண்புமிகு முதல்வரை கேட்டுக் கொண்டிருந்தேன்.

எனது வேண்டுகோளை ஏற்று அதற்கான அறிவிப்பினை 29.5.2021 அன்று வெளியிட்ட முதல்வருக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கரோனா நோய்த் தொற்றால் பெற்றோா்களை இழந்து வாடும் குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும், பட்டப் படிப்பு வரை அவா்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் எனவும் அறிவிப்பு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.