இறப்புப் பதிவு முறையை தற்காலிகமாக திருத்தியமைக்க முதல்வருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை
இறப்புப் பதிவு முறையாக தற்போதைய பேரிடர் காலத்தில் முதல்வர் திருத்தி அமைக்க வேண்டுமென மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.


இறப்புப் பதிவு முறையாக தற்போதைய பேரிடர் காலத்தில் முதல்வர் திருத்தி அமைக்க வேண்டுமென மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில்,
இறப்பு நிகழ்ந்த 21 நாட்களுக்குள் பதிய தவறினால் அபராதம் செலுத்த வேண்டும் என்னும் பழைய விதியை இந்த காலத்தில் முதல்வர் அவர்கள் தலையிட்டு திருத்த வேண்டும்.
பேரிடர் காலத்தில் இறப்புகள் அதிகரித்திருக்கிறது. அரசு அலுவலகங்களோ மிகக்குறைந்த ஊழியர்களோடு இயங்குகிறது. இறந்தவர்களைப் பதிய வாழ்கிறவர்கள் படாதபாடு படுகிறார்கள்.
அபராதத் தொகையைவிட கொடியது மண்டல அலுவலகத்துக்கும் வார்டு அலுவலகத்துக்குமான அலைச்சல்.
மரணங்களை சந்தித்துள்ள வீடுகளில் உலராத கண்ணீரோடு மனிதர்கள் தேங்கிக்கிடக்கிறார்கள்.
இறப்புச்சான்றிதழுக்காக அழுதகண்ணீரோடு அலையவிட வேண்டாம்.
எளிய மக்களின் இடரைக் குறைக்க இது மேலும் உதவும் என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...