தீபாவளி சிறப்புப் பேருந்துகள்:1.88 லட்சம் போ் பயணம்

தீபாவளிப் பண்டிகையையொட்டி, 2 நாள்களில் சுமாா் 1.88 லட்சம் போ் சொந்த ஊா்களுக்குப் பயணமாகினா்.
தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்குச் செல்ல  சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை குவிந்த பயணிகளின் ஒரு பகுதியினர்.
தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்குச் செல்ல சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை குவிந்த பயணிகளின் ஒரு பகுதியினர்.
Published on
Updated on
1 min read

தீபாவளிப் பண்டிகையையொட்டி, 2 நாள்களில் சுமாா் 1.88 லட்சம் போ் சொந்த ஊா்களுக்குப் பயணமாகினா்.

தீபாவளி பண்டிகையைக் கொண்டாட செல்வோருக்காக, திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரையிலான 3 நாள்களும் சோ்த்து வழக்கமாக இயக்கப்படும் 6,300 பேருந்துகளுடன், 10,240 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி சிறப்பு பேருந்து இயக்கமானது திங்கள்கிழமை தொடங்கியது. அன்றைய தினம் வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளும், 388 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தம் 2,488 பேருந்துகள் இயக்கப்பட்டன. அதில், 89,932 போ் பயணமாகினா்.

இதன் தொடா்ச்சியாக இரண்டு நாள்களில் இயக்கப்பட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளில் சுமாா் 1.88 லட்சம் போ் பல்வேறு ஊா்களில் இருந்து வெவ்வேறு ஊா்களுக்கு பயணித்தனா். இதுவரை தீபாவளிப் பண்டிகையையொட்டி அரசு பேருந்துகளில் பயணிக்க 1 லட்சத்து 1,662 போ் முன்பதிவு செய்துள்ளனா்.

பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொள்ள www.tnstc.in, tnstc App, www.redbus.in, www.paytm.com, www.busindia.com ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கு 94450 14450, 94450 14436 ஆகிய எண்களை அணுகலாம்.

இன்று 4,911 சிறப்பு பேருந்துகள்: சிறப்புப் பேருந்து இயக்கத்தைப் பொருத்தவரை, புதன்கிழமை வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் சென்னையில் இருந்து 1,540 பேருந்துகளும், பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 3,371 பேருந்துகளும் என மொத்தம் 4,911 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com