அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அடுத்த 3 மணி நேரத்துக்கு இங்கெல்லாம் மழை பெய்யும்

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
அடுத்த 3 மணி நேரத்துக்கு இங்கெல்லாம் மழை பெய்யும்
Updated On :6 நவம்பர் 2021, 11:21 am

DIN


சென்னை: தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு வெளியிட்டிருக்கும் எச்சரிக்கைச் செய்தியில்,

தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களிலும், புதுவையிலும் அடுத்த 3 மணி நேரத்துக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Story image

எனவே பொதுமக்கள் இது குறித்து அறிந்து முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது சிறந்தது. முடிந்தவரையில் அவசியமற்ற பயணத்தைத் தவிர்க்கலாம். கையில் நிச்சயமாக குடை அல்லது மழைக் கவச உடை எடுத்துச் செல்லலாம். சாலைகளில் கவனமுடன் பயணிக்க வேண்டியது அவசியம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.