உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

கொள்ளிடம் ஆற்றங்கரைகளில் ஏடிஜிபி நேரில் ஆய்வு 

வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 28ஆம் தேதி முதல் தொடங்கி உள்ள நிலையில் கடந்த இரு தினங்களாக தீவிரமடைந்து சீர்காழி வட்டாரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

News image

கொள்ளிடம் ஆற்றின் கரைகளை ஏடிஜிபி நேரில் ஆய்வு 

Updated On :28 ஜனவரி 2024, 10:03 am IST

சீர்காழி: வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 28ஆம் தேதி முதல் தொடங்கி உள்ள நிலையில் கடந்த இரு தினங்களாக தீவிரமடைந்து சீர்காழி வட்டாரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் இன்னும் மூன்று நாள்களுக்கு கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மண்டலம் தெரிவித்துள்ளது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விதிக்கப்பட்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் வருவாய்த் துறையினர், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளவும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும் தயார் நிலையில் உள்ளனர்.

Story image

இந்நிலையில் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் அளக்குடி பகுதியில் ஆற்றின் வலது கரை உடைந்து  கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டது. அதன் பின்னர் அளகுடியில் கொள்ளிடம் ஆற்றின் கரை பாறாங்கற்கள் கொட்டப்பட்டு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர் மழையினால் மேட்டூரில் இருந்து காவிரியில் 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது. இதனால் ஆற்றின் கரைகள் வலுவாக உள்ளதா என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே தஞ்சை  சரக வடகிழக்கு பருவ மழை கண்காணிப்பு அலுவலரும், ஏடிஜிபி-யுமான மகேஷ்குமார் அகர்வால் அளக்குடி பகுதிக்கு நேரில் வந்து கரைகளின் தன்மை குறித்தும் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் காவல்துறையினருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது தஞ்சை சரக டிஐஜி பிரவேஷ்குமார், மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி சுகுணா சிங், சீர்காழி டிஎஸ்பி  லாமெக், கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் அமுதாராணி மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.