
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் ஜிஎன்டி சாலையில் மழை நீர் தேங்கி நிற்பதால் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் முன்னிலையில் கல்வாய் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் ஊராட்சி சென்னை-கொல்காத்தா தேசிய நெடுஞ்சாலை ஒட்டி உள்ளது. இந்த பகுதியில் அணுகு சாலையில் மழைநீரும் கழிவு நீரும் சேர்ந்து கால்வாய் அடைபட்டு சாலை மழை வெள்ளத்தால் நிரம்பி கிடந்தது.
இதையும் படிக்க | சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு
இந்நிலையில், இது குறித்து தகவல் அறிந்து வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்தசாரதி சம்பவ இடம் விரைந்தனர்.
தொடர்ந்து அடைப்பட்டு கிடந்த கால்வாய்களை ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரி மழை நீர் தேங்காமல் வெளியேற வழி ஏற்படுத்தினர்.
நிகழ்வின் போது ஆரம்பாக்கம் ஊராட்சி தலைவர் தனசேகர், துணை தலைவர் சிலம்பரசன், வார்டு உறுப்பினர் என்.எஸ்.ஆர்.நிஜாமுதின், ஊராட்சி செயலாளர் முரளி ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.