விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு

சென்னை உள்ளிட்ட 8 வட மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு

Updated On :10 நவம்பர் 2021, 7:26 am

DIN

சென்னை உள்ளிட்ட 8 வட மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தியில்,

தென்‌கிழக்கு வங்கக்‌ கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ மேற்கு வங்க கடல்‌ பகுதியில்‌ நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில்‌ காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வட தமிழக கடற்கரை நோக்கி நகரும்‌ அதனைத்‌ தொடர்ந்து 24 மணி நேரத்தில்‌ படிப்படியாக வலுவிழக்கும்‌.  

10.11.2021: சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, விழுப்புரம்‌, ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, ஓரிரு இடங்களில்‌ அதி கன மழையும்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌, கடலூர்‌, கள்ளக்குறிச்சி, வேலூர்‌, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, சேலம்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, கோயம்புத்தூர்‌ தர்மபுரி ஈரோடு, கிருஷ்ணகிரி நாமக்கல்‌, அரியலூர்,‌ பெரம்பலூர்,‌ புதுக்கோட்டை, மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌ .

11.11.2021: சென்னை, திருவள்ளூர்‌, கள்ளக்குறிச்சி, சேலம்‌, வேலூர்‌, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, ஓரிரு இடங்களில்‌ அதி கன மழையும்‌, தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம்‌, விழுப்புரம்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன
மழையும்‌, செங்கல்பட்டு, புதுச்சேரி, கோயம்புத்தூர்‌, நீலகிரி, நாமக்கல்‌, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌ .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.