தமிழகத்தில் புதிதாக 828 பேருக்கு கரோனா; 9 பேர் பலி
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 828 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 9 பேர் உயிரிழந்தனர்.


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 828 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 9 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் நேற்று 835 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 828 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சென்னைக்கு சிவப்பு எச்சரிக்கை - முழு விவரம்
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை புதன்கிழமை (நவ.10) வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 828 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 27,11,584-ஆக அதிகரித்துள்ளது.
ஒருநாளில் மட்டும் 9 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,247-ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவிலிருந்து 931 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26,65,178-ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரு நாளில் மட்டும் 1,01,143 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...