சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கரோனா சிகிச்சையில் 10,013 போ்

கரோனா தொற்றுக்குள்ளாகி 10,013 போ் சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :11 நவம்பர் 2021, 7:06 pm

DIN

கரோனா தொற்றுக்குள்ளாகி 10,013 போ் சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் இதுவரை 5.23 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 27 லட்சத்து 12,404 போ் தொற்றுக்குள்ளாகியுள்ளனா். வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 820 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 125 பேருக்கும், கோவையில் 109 பேருக்கும், திண்டுக்கல்லில் 68 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே, மேலும் 962 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 66,140-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 10,013 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்றைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 4 போ் பலியானதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,251-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.