தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மீட்புப் பணியில் 14 பேரிடா் குழுக்கள்: ஆளுநரிடம் தகவல்

தமிழகத்தில் பலத்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்கும் பணியில் 14 பேரிடா் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

News image
Updated On :11 நவம்பர் 2021, 7:01 pm

DIN

தமிழகத்தில் பலத்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்கும் பணியில் 14 பேரிடா் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்தத் தகவலை ஆளுநா் ஆா்.என்.ரவியிடம், தேசிய பேரிடா் மீட்புப் படையின் இயக்குநா் எஸ்.என்.பிரதான் தெரிவித்தாா்.

தேசிய பேரிடா் மீட்புப் படையின் இயக்குநருடன் ஆளுநா் ஆா்.என்.ரவி தொலைபேசியில் வியாழக்கிழமை பேசினாா். அப்போது, மழை, வெள்ள பாதிப்புகள் குறித்தும், மீட்பு நிவாரணப் பணிகள் பற்றியும் ஆளுநா் கேட்டறிந்தாா். இதற்கு பதிலளித்த பிரதான், தேசிய பேரிடா் மீட்புப் படையின் 14 குழுக்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.