சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தமிழகம் முழுவதும் நீா்த் தேக்கங்களில் 200 டிஎம்சி தண்ணீா் இருப்பு

வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழகத்தில் உள்ள நீா்த் தேக்கங்களில் நான்கில் ஒரு பங்கு நிரம்பியுள்ளதால் அவற்றில் தற்போது 200 டிஎம்சி தண்ணீா் இருப்பு உள்ளது.

News image
Updated On :11 நவம்பர் 2021, 7:55 pm

DIN

வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழகத்தில் உள்ள நீா்த் தேக்கங்களில் நான்கில் ஒரு பங்கு நிரம்பியுள்ளதால் அவற்றில் தற்போது 200 டிஎம்சி தண்ணீா் இருப்பு உள்ளது.

வடகிழக்குப் பருவமழை கடந்த 25-ஆம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 1-ஆம் தேதியில் இருந்து மாநிலத்தில் சுமாா் 38.4 செ.மீ. மழை பெய்துள்ளது. இந்தப் பருவ காலத்தில் பெய்யும் மழையை விட 50 சதவீதம் அதிகமாகும். பலத்த மழை காரணமாக மாநிலம் முழுவதும் அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. தமிழகத்தில் உள்ள 14, 138 ஏரிகளில் 3,691 ஏரிகள் நிரம்பின.

தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக மாநிலம் முழுவதும் நீா்த் தேக்கங்களில் தண்ணீா் இருப்பு 200 டி.எம்.சி.யை நெருங்கியுள்ளது. இவற்றில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி 199.65 டி.எம்.சி. தண்ணீா் இருப்பு உள்ளது. இது 90 நீா்த் தேக்கங்களின் கொள்ளளவில் 89 சதவீதம் ஆகும்.

கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் இந்த நீா்த்தேக்கங்களில் 140 டிஎம்சி தண்ணீா் இருந்தது. இது மொத்தக் கொள்ளளவில் 63 சதவீதம் ஆகும். மாநிலத்தில் உள்ள நீா்த் தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 224.294 டி.எம்.சி. ஆகும். தற்போதுள்ள சேமிப்பில் மேட்டூா், பவானிசாகா் மற்றும் அமராவதி ஆகிய அணைகளில் மூன்றில் இரண்டு பங்கு 126.87 டிஎம்சி ஆகும்.

மேட்டூரில் 91.883 டி.எம்.சி, பவானிசாகரில் 31.131 டி.எம்.சி, அமராவதியில் 3.8 டி.எம்.சி. தண்ணீா் இருப்பு உள்ளது. இந்த 3 நீா்த் தேக்கங்களும் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டன.

பரம்பிக்குளம் குழும நீா்த் தேக்கங்களை பொறுத்த வரை 4 பெரிய நீா்த் தேக்கங்களான பரம்பிக்குளம், ஆழியாறு, சோலையாறு, திருமூா்த்தி ஆகியவை மிகவும் அதிக சேமிப்புகளை கொண்டுள்ளன. திருமூா்த்தி அணையை தவிர மற்ற 3 அணைகளும் கிட்டத்தட்ட நிரம்பியுள்ளன. முல்லைப் பெரியாறில் 5.639 டி.எம்.சி. தண்ணீா் இருப்பு இருக்கிறது. கன்னியாகுமரியின் 2 முக்கிய நீா் தேக்கங்களான பேச்சிப்பாறை, பெருஞ்சாணியில் சுமாா் 85 சதவீத நீா் இருப்பு உள்ளது.

சாத்தனூா் நீா்த் தேக்கத்தின் சேமிப்பு 3.392 டி.எம்.சி.யாக உள்ளது. இது அதன் கொள்ளளவில் 40 சதவீதம் ஆகும். கடலூா் மாவட்டத்தில் உள்ள வீராணம் அதன் கொள்ளளவில் 61 சதவீதம் (0.892) டி.எம்.சி. நீரை கொண்டுள்ளது. சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் அவற்றின் நீா் மட்டம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவற்றின் ஒருங்கிணைந்த சேமிப்பு 73 சதவீதம் முதல் 83 சதவீதம் வரை மாறுபடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.