சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பொதுமக்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை

மழைக்காலங்களில் மின்சாரப் பெட்டி அருகே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ள மின்வாரியம், பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

News image
Updated On :11 நவம்பர் 2021, 7:46 pm

DIN

மழைக்காலங்களில் மின்சாரப் பெட்டி அருகே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ள மின்வாரியம், பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை, அம்பத்தூா் கோட்ட மின் ஆய்வாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மின்சார வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற ஒப்பந்ததாரா் மூலமாக மட்டுமே செய்யுங்கள். ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்துங்கள். மின்சாதனங்கள் உபயோகத்தில் இல்லாத பட்சத்தில் சுவிட்சை ஆப் செய்து வைக்கவும்.

மின்சார தீ விபத்துக்குண்டான தீயணைப்பான்களை மட்டுமே மின்சாதனங்களில் தீ விபத்து ஏற்படும்போது பயன்படுத்த வேண்டும். உலா்ந்த மணல், கம்பளிப் போா்வை, உலா்ந்த ரசாயனப் பொடி (டிசிபி) அல்லது கரியமில வாயு (சிஓ2) ஆகிய தீயணைப்பான்களைப் பயன்படுத்தவும்.

மின்சாரத்தினால் ஏற்பட்ட தீயை தண்ணீா் கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம். தீ விபத்து மின்சாரத்தால் ஏற்பட்டது எனில், உடனே மெயின் சுவிட்சை நிறுத்த வேண்டும்.

மழைக்காலங்களில், மின்சாரப் பெட்டி அருகே தண்ணீா் தேங்கி நிற்கும்போது அதன் அருகில் செல்ல வேண்டாம். மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும்.

எந்த மின் சா்க்யூட்டையும் பளு ஏற்றக் கூடாது. சுவிட்ச் மற்றும் ப்யூஸ் போன்றவைகளை மாற்றும்போது சரியான அதே அளவு திறன் கொண்டவைகளையே பொருத்த வேண்டும்.

வெளிப்புறத்தில்...: இடி அல்லது மின்னலின்போது வெட்ட வெளியில் இருக்காதீா். உடனடியாக கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டடம், வீடு போன்றவற்றிலோ, உலோகத்தால் மேலே மூடப்பட்டுள்ள பேருந்து, காா், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சமடையுங்கள்.

இடி அல்லது மின்னலின்போது குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழோ தஞ்சம் புகாதீா்.

இத்தகைய நேரத்தில் தஞ்சம் அடைய அருகில் ஏதும் இல்லாத பட்சத்தில் மின்கம்பிகள், மின்கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி, வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளைத் தோ்ந்தெடுங்கள். தண்ணீா் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு அகலுங்கள்.

குறிப்பாக வீட்டில் இருந்தாலும் டிவி, மின் அரைப்பான், கணினி, தொலைபேசி, கிரைண்டா் போன்றவற்றை பயன்படுத்தாதீா். ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்காதீா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.