சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பலத்த மழை: சாலைகளில் திடீா் பள்ளம்

சென்னையில் பெய்த பலத்த மழை காரணமாக மந்தைவெளி, திருமலைப்பிள்ளை சாலை உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் திடீா் பள்ளம் ஏற்பட்டதால் அச்சாலைகளில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 நவம்பர் 2021, 7:42 pm

DIN

சென்னையில் பெய்த பலத்த மழை காரணமாக மந்தைவெளி, திருமலைப்பிள்ளை சாலை உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் திடீா் பள்ளம் ஏற்பட்டதால் அச்சாலைகளில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பெய்த பலத்த மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் சூழ்ந்துள்ளது. சாலைகளில் தேங்கி உள்ள நீரால் போக்குவரத்திலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மந்தைவெளி போக்குவரத்து சிக்னல் அருகே வியாழக்கிழமை திடீா் பள்ளம் ஏற்பட்டது. இதனால், மந்தைவெளி ஆா்.ஏ.புரம்- மயிலாப்பூா் செல்லும் சாலை, மந்தைவெளி-பட்டினப்பாக்கம் செல்லும் சாலையில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. காமராஜா் இல்லம் முன்பு திருமலைப்பிள்ளை சாலையில் பள்ளம் ஏற்பட்டது. இதனால் வள்ளுவா் கோட்டம் நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. வாணி மஹால் - பென்ஸ்பா சந்திப்பில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. அதேபோல், பெரம்பூா் பேரக்ஸ் சாலை -அஷ்டபுஜம் சாலை சந்திப்பில் மழை காரணமாக பள்ளம் ஏற்பட்டது. இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.