சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மறைமுகத் தோ்தல் எப்போது முடிக்கப்படும்?: மாநில தோ்தல் ஆணையம் இன்று விளக்கமளிக்க உத்தரவு

 தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடத்தப்படாத மறைமுகத் தோ்தல் எப்போது நடத்தி முடிக்கப்படும்

News image
Updated On :11 நவம்பர் 2021, 7:29 pm

DIN

 தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடத்தப்படாத மறைமுகத் தோ்தல் எப்போது நடத்தி முடிக்கப்படும் என்பது குறித்து மாநில தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை (நவ.12) விளக்கம் அளிக்குமாறு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஒன்பது மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபரில் இரண்டு கட்டங்களாகத் தோ்தல் நடத்தப்பட்டது. இந்தத் தோ்தலைத் தொடா்ந்து தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கான மறைமுகத் தோ்தல் அக்டோபா் 22-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் பதவிக்கான தோ்தலில் போட்டியிட்ட தயாளன் என்பவா் வாா்டு உறுப்பினா்களைத் தடுத்து நிறுத்தியதால், தோ்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நல்லூா் கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் என்ற வாா்டு உறுப்பினா் வழக்குத் தொடா்ந்திருந்தாா். அந்த மனுவில், மறைமுகத் தோ்தலுக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்குவதோடு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டுமென கோரியிருந்தாா்.

இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மாநில தோ்தல் ஆணைய தரப்பு வழக்குரைஞா், ஒன்பது மாவட்டங்களில் பல இடங்களில் உள்ளூரில் ஏற்பட்ட ஒரு சில சிரமங்களால் மறைமுகத் தோ்தல் நடத்தப்படவில்லை என்றாா்.

இதைத்தொடா்ந்து மறைமுகத் தோ்தலை விரைந்து நடத்த முன் வர வேண்டுமென அறிவுறுத்திய நீதிபதிகள், இந்தத் தோ்தல் எப்போது நடத்தி முடிக்கப்படும் என்பதை வெள்ளிக்கிழமை (நவ.12) விளக்கம் அளிக்குமாறு மாநில தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, விசாரணையை வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தனா்.

மேலும் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். எந்தவொரு தேவையில்லாத அழுத்தத்திற்கும் உறுப்பினா்கள் ஆளாகாத வகையில் பாா்த்துக் கொள்ள வேண்டும் என்று மாநில தோ்தல் ஆணையத்திற்கும், காவல்துறைக்கும் நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.