தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சென்னையில் 200 சிறப்பு மருத்துவ முகாம்களை தொடங்கி வைத்தார் முதல்வர்

மழைக்கால நோய்களில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில்  சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கூடுதலாக 200 சிறப்பு மருத்துவ முகாம்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

News image

சென்னையில் 200 சிறப்பு மருத்துவ முகாம்களை தொடங்கி வைத்தார் முதல்வர்

Updated On :12 நவம்பர் 2021, 7:45 am

DIN

மழைக்கால நோய்களில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில்  சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கூடுதலாக 200 சிறப்பு மருத்துவ முகாம்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

 தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைக்கால நோய்களில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதலாக 200 சிறப்பு மருத்துவ முகாம்களை தொடங்கி வைக்கும் விதமாக இன்று (12.11.2021) சென்னை, தேனாம்பேட்டை, ஆஸ்டின் நகரில் சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினாலும் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கன மழையும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்து
வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் மழையினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை சீர் செய்யும் பணிகள் போர்க்கால
அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் 7.11.2021 அன்று ரிப்பன் மாளிகை, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பருவமழை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறையின் சார்பில் பருவமழை காலத்தை முன்னிட்டு ஏற்படக் கூடிய தொற்றுநோய்கள் மற்றும் தொற்றா நோய்களிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கவும் 200 வார்டுகளிலும் ஒரு வார்டுக்கு இரண்டு சிறப்பு மருத்துவ முகாம்கள், என மொத்தம் 400 சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்திட உத்தரவிட்டார்கள்.

அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 200 வார்டுகளிலும் முதற்கட்டமாக 200 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து, மழைக்கால நோய்களில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதலாக 200 சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், ஊரக தொழிற் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்  த. வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் ஜெ. ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.