மேட்டூர் அணை நிலவரம்: நீர்வரத்தும் - நீர் திறப்பும் சம அளவில்
அணை நிரம்பிய நிலையில் கடந்த இரு தினங்களாக நீர்வரத்து சீராக இருப்பதால் திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 40,000 கன அடியாக நீடிக்கிறது.


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 40,000 கன அடியாக நீடிக்கிறது. அணை நிரம்பிய நிலையில் கடந்த இரு தினங்களாக நீர்வரத்து சீராக இருப்பதால் திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 40,000 கன அடியாக நீடிக்கிறது.
நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,000 கன அடி நீரும் 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 18,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 120.10 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 93.63 டி.எம்.சி. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து வருகிறது. மழையளவு 28.40 மி.மீ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...