தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கிருஷ்ணகிரி அருகே வீட்டின் மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்து 3 பேர் காயம்

கிருஷ்ணகிரி அருகே வீட்டின் மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்ததில் 65 வயது முதியவர் உள்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News image
கிருஷ்ணகிரி அருகே வீட்டின் மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்து 3 பேர் காயம்
Updated On :16 நவம்பர் 2021, 5:59 am

DIN


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே வீட்டின் மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்ததில் 65 வயது முதியவர் உள்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி அருகே, கட்டிகானப்பள்ளி ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் சத்துணவு அமைப்பாளர் மணி என்பவரின் வீட்டில் வைகுண்டம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (65) குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

Story image

கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் சந்திரசேகர் வசிக்கும் வீட்டின் மேற்கூரை பூச்சு,  திங்கள்கிழமை இரவு இடிந்து விழுந்தது. இதில், சந்திரசேகரின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும், ரமேஷின் மனைவி புனிதா (34), இவரது மகன் புர்னேஷ் (2) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த இந்த மூன்று பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.