அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர்கள் திமுகவில் இணைந்தனர்!
தம்மம்பட்டி அருகே, அதிமுகவைச் சேர்ந்த இரண்டு ஊராட்சி மன்றத் தலைவர்கள் திமுக வில் இணைந்தனர்.


தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே, அதிமுகவைச் சேர்ந்த இரண்டு ஊராட்சி மன்றத் தலைவர்கள் திமுக வில் இணைந்தனர்.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில், அமைச்சர் நேரு தலைமையில் உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, ஜங்கமசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவர் பெரியசாமி, நாகியம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் முத்துராஜ் ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தனர். இவர்கள் இருவரும், பல ஆண்டுகளாக அதிமுக உறுப்பினர்களாக இருந்து வந்தனர்.
இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆர்.சிவலிங்கம், இராஜேந்திரன், செல்வகணபதி, கெங்கவல்லி ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஏ.கே.அகிலன், தம்மம்பட்டி நகர திமுக செயலாளர் விபிஆர். ராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...