மெரினா கடற்கரையில் சட்டவிரோதமாக கூடும் நபர்கள் மீது நடவடிக்கை
மெரினா கடற்கரையில் சட்டவிரோதமாக கூடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.


மெரினா கடற்கரையில் சட்டவிரோதமாக கூடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை மெரினா கடற்கரை பகுதிகளில் எந்தவிதமான போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்ட நிகழ்வுகளும் மேற்கொள்ள கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது. தற்போது கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு உத்தரவின்படி வருகின்ற 30.11.2021 வரை பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவும் அமலில் இருந்து வருகிறது. மேலும் சென்னை பெருநகரில் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்கள் சென்னை மாநகர காவல் சட்ட விதி 41ன் படி காவல் துறையினரால் ஒழுங்குபடுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, ஏற்பளிக்கப்பட்ட இடங்களில் மட்டும் கூட்டங்கள்/ போராட்டங்கள் நடத்த பல்வேறு அமைப்பினருக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
இன்று (19.11.2021) மாண்புமிகு தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் மாணவ பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதில், கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் வருகின்ற 20ந்தேதி, ஜனவரி-2020 க்குப்பின்னர் நேரடி தேர்வு நடத்துவது என்று முடிவு செய்துஅதை மாணவ பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் சிலர் சமூக வலைதளங்களில், இணையதள தேர்வு நடத்த கோரி, 22.11.2021 அன்று திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் மெரினா கடற்கரைக்கு போராட்டம் நடத்த மாணவர்களை வரும்படி அழைப்பு விடுத்து முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலை தளங்களில் பொய்யான செய்திகள் மற்றும் பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது.
மேற்படி செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதால், மாணவர்கள் யாரும் அதை நம்ப வேண்டாம் எனவும், இது போன்று பொய்யான வதந்திகளை மேற்படி சமூக வலை தளங்கள் மூலம் பரப்புவோர் மீது தகவல் தொழில் நுட்ப சட்டம் உட்பட இதர சட்டபிரிவுகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...