இரு நாள்களில் தங்கம் விலை ரூ. 904 குறைவு!
சென்னையில் தங்கத்தின் விலை கடந்த இரு நாள்களில் ரூ. 904 குறைந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் தங்கத்தின் விலை கடந்த இரு நாள்களில் ரூ. 904 குறைந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்கள் முழுவதும் பெரும்பாலாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது. விலை குறைந்தாலும் அதிக வித்தியாசமில்லாமல் இருந்தது.
இந்நிலையில், தங்கத்தின் விலை கடந்த இரு நாள்களில் ரூ. 904 குறைந்துள்ளது. இன்று சவரனுக்கு ரூ.136 குறைந்து, ரூ.36,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
புதன்கிழமை காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம்(22 காரட்) தங்கம் ரூ.17 குறைந்து, ரூ.4,500-க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் வெள்ளி ரூ. 1.20 குறைந்து ரூ. 67.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.67,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
திங்கள்கிழமை ஒரு சவரன் தங்கம் ரூ. 36,904 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4,613-க்கு விற்பனையானது.
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,500
1 பவுன் தங்கம்...............................36,000
1 கிராம் வெள்ளி............................. 67.60
1 கிலோ வெள்ளி.............................67,600
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,517
1 பவுன் தங்கம்...............................36,136
1 கிராம் வெள்ளி............................. 68.80
1 கிலோ வெள்ளி.............................68,800
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...