கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை?
தொடர் கனமழையால் தமிழகத்தின் 7 மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை(நவ.26) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


தொடர் கனமழையால் 10 மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை(நவ.26) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. மேலும் 4 நாள்களுக்கு மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலைமுதல் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மதியத்திற்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்திருந்த நிலையில் தற்போது மழையின் தீவிரத்தால் நாளை(நவ.26) திருநெல்வேலி , தூத்துக்குடி , புதுக்கோட்டை , விருதுநகர் , திண்டுக்கல் , அரியலூர் , தேனி, தென்காசி , பெரம்பலூர் மாவட்டங்களில் பள்ளிகள் , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
மேலும் மதுரை , ராமநாதபுரம் , திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...