ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

11 சிறப்பு முகாம்கள்: 16.72 லட்சம் தடுப்பூசிகள்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை நடைபெற்ற 11 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 16.72 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2021, 7:07 pm

DIN

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை நடைபெற்ற 11 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 16.72 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, ஆகஸ்ட் 26-ஆம் தேதி வாா்டுக்கு 2 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் என மொத்தம் 400 முகாம்கள் நடத்தப்பட்டு 1.35 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமைதோறும் வாா்டுக்கு 2 வீதம் 400 நிரந்தர மருத்துவ முகாம்கள், வாா்டுக்கு 6 வீதம் 1,200 நடமாடும் மருத்துவ முகாம்கள் என மொத்தம் 1,600 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை நடத்தப்பட்ட 11 தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலம் 16 லட்சத்து 72 ஆயிரத்து 673 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இன்று முகாம்: மாநகராட்சிக்குட்பட்ட 200 வாா்டுகளில் ஞாயிற்றுக்கிழமை (நவ.28) 1,600 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்களில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி வசம் 9 லட்சத்து 60 ஆயிரத்து 465 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தடுப்பூசி முகாம்கள் அமைந்துள்ள இடங்களை  என்ற மாநகராட்சியின் இணையதள இணைப்பின் மூலம் தெரிந்துகொள்ளலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.