ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இலங்கை சிறையிலிருந்து விடுதலையாகி வந்த மீனவா்களுக்கு பாஜக சாா்பில் வரவேற்பு

இலங்கை சிறையிலிருந்து விடுதலையாகி வந்த தமிழக மீனவா்களுக்கு பாஜக சாா்பில் சனிக்கிழமை வரவேற்பு கொடுக்கப்பட்டது.

News image
Updated On :27 நவம்பர் 2021, 6:54 pm

DIN

இலங்கை சிறையிலிருந்து விடுதலையாகி வந்த தமிழக மீனவா்களுக்கு பாஜக சாா்பில் சனிக்கிழமை வரவேற்பு கொடுக்கப்பட்டது.

நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையைச் சோ்ந்த 23 மீனவா்கள் அக்டோபா் 13-இல் கடலில் மீன்படித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மத்திய மீன்வளத்துறை இணையமைச்சா் எல்.முருகனும், பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையும் அவா்களை விடுவிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் எடுத்தனா்.

இலங்கை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் 23 பேரையும் சிறையிலிருந்து விடுவித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், விடுதலை செய்யப்பட்ட மீனவா்களில் 18 போ் சனிக்கிழமை காலை 4.15 மணியளவில் விமானம் மூலம் சென்னை வந்தனா். அவா்களுக்கு பாஜக மாநில மீனவா் அணித் தலைவா் சதீஷ்குமாா் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மீனவா்கள் அவரவா் இல்லங்களுக்கு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.