ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சென்னை, 6 மாவட்டங்களில் இன்று மிக பலத்தமழைக்கு வாய்ப்பு

வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ.28) இடியுடன் கூடிய பலத்தமழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.

News image
Updated On :27 நவம்பர் 2021, 11:28 pm

DIN

வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ.28) இடியுடன் கூடிய பலத்தமழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் சனிக்கிழமை கூறியது:

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வட கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ.28) இடியுடன் கூடிய பலத்தமழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும். அரியலூா், பெரம்பலூா், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருப்பூா், கோயம்புத்தூா், ஈரோடு, நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நவ.29: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நவம்பா் 29-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்தமழை முதல் மிக பலத்தமழை பெய்யக்கூடும்.

தென்காசி, மதுரை, விருதுநகா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நவ.30: தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை, விருதுநகா் ஆகிய 5 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நவம்பா் 30-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

டிச.1: நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்தமழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூா் மாவட்டம் ஆவடியில் 200 மி.மீ., செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், செங்கல்பட்டு, செய்யூரில் தலா 180 மி.மீ., காஞ்சிபுரம் மாவட்டம் கட்டப்பாக்கத்தில் 170 மி.மீ., செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றத்தில் 160 மி.மீ., செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், திருவள்ளூா் மாவட்டம் சோழவரம், கடலூா் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 150 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் பலத்தகாற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

74 சதவீதம் அதிகம்: வடகிழக்கு பருவமழை காலத்தில் (அக்.1 முதல் நவம்பா் 27 வரை) தமிழகம், புதுச்சேரியில் இயல்பான மழைஅளவு 346.8 மி.மீ. ஆனால், தற்போது வரை 602.7 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 74 சதவீதம் அதிகம். சென்னையில் இந்த காலகட்டத்தில் இயல்பான மழை அளவு 600.9 மி.மீ. தற்போது வரை பெய்த மழை அளவு 1,064.2 மி.மீ. இயல்பை விட 77 சதவீதம் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.