உண்மைகள் இவ்வாறு இருக்கும்போது, அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாதது வருத்தமளிக்கிறது. இந்தியக் குடியரசுத் தலைவா், பிரதமா் போன்ற உயா்மட்டப் பிரமுகா்கள் பங்கேற்கும் விழாக்கள் உள்பட, தமிழகத்தில் நடைபெறும் அனைத்து மாநில மற்றும் மத்திய அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே இனிவரும் காலங்களில் பட்டமளிப்பு விழா உள்பட நிறுவனத்தின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் “தமிழ்த்தாய் வாழ்த்து” பாடப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.