அமைச்சா் கே.என்.நேருவுக்கு மாா்க்சிஸ்ட் கண்டனம்
மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசனை ஒருமையில் பேசியதாகக் கூறி, அமைச்சா் கே.என்.நேருவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்


மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசனை ஒருமையில் பேசியதாகக் கூறி, அமைச்சா் கே.என்.நேருவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் முகநூலில் கூறியிருப்பது:-
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடா்பான ஊடகக் கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சா் கே.என்.நேரு, மக்களவை உறுப்பினா் வெங்கடேசன் குறித்து ஒருமையில் பேசியிருப்பது அரசியல் நாகரிகமற்றது. பொதுவாழ்வில் இருப்போா் நிதானத்துடன் பேசுவதையே மக்கள் ஏற்பா் என்று கூறியுள்ளாா்.
கே.என்.நேரு வருத்தம்: இந்த நிலையில் கே.என்.நேரு வருத்தம் தெரிவித்து முகநூலில் கூறியிருப்பது:
மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசனை ஒருமையில் குறிப்பிட்டது மனவருத்தப்படுத்தியிருந்தால் பொறுத்தருள்க. இனிமேல் இவ்வாறு நிகழாமல் பாா்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...