ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று போர் வீரர்களின் வாரிசு தாரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அதைத் தொடர்ந்து கேப்டன் குபேர காந்திராஜ் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (30.11.2021) தலைமைச் செயலகத்தில், ராணுவத்தில் பணியாற்றி வீர மரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று போர் வீரர்களின் வாரிசுதாரர்களை நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்து, கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து அவர்களது குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
படைவீரர் கே.கருப்பசாமியின் மனைவிஆர். தமயந்தி முதல்வரிடமிருந்து நிவாரண நிதிக்கான காசோலையைப் பெறுகிறார்.
ராணுவத்தில் பணியாற்றி வீர மரணமடைந்த காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த படை வீரர் கே. ஏகாம்பரம் -அவருடைய மனைவி இ.குமாரி,
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்தைச் சேர்ந்த படைவீரர் கே.கருப்பசாமி -அவருடைய மனைவிஆர். தமயந்தி,
படை வீரர் கே. ஏகாம்பரத்தின் மனைவி இ.குமாரி, முதல்வரிடமிருந்து நிவாரண நிதிக்கான காசோலையைப் பெறுகிறார்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தைச் சேர்ந்த படைவீரர் பி.பழனிகுமார் - அவருடைய மனைவி ஜி. பாண்டியம்மாள் ஆகியோருக்கு முதல்வர், கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து தலா
20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
மேலும், லடாக் - காரகோரம் கணவாயிலிருந்து மலரி வரை (ஜோஷிமத், உத்ரகாண்ட் மாநிலம்) பனிச்சறுக்கு மூலம் இந்திய ராணுவ வீரர்கள் சென்ற குழுவில் பங்கேற்ற முதல் தமிழ்நாட்டு ராணுவ வீரரான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கேப்டன் எஸ்.குபேர காந்திராஜின் (IC-80931P) சாதனையை கௌரவித்து முதல்வர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
முதல்வரின் பாராட்டுச் சான்றிதழைப் பெறுகிறார் கேப்டன் எஸ்.குபேர காந்திராஜ்.
இந்நிகழ்வில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., பொதுத்துறை செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன், இ.ஆ.ப., பொதுத்துறை சிறப்புச் செயலாளர் வி.கலையரசி, இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு: பிரதமர் மோடி

மத்திய அரசு பல்கலைக்கழகத்தில் குரூப் ‘ஏ, பி, சி ‘ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் எதிா்காலத்துக்காகவே நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டம்: டி.கே.சிவகுமாா்

போதை மாத்திரை வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai


