நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் இந்தியாவின் எதிா்காலத்துக்காக நடத்தப்படுகிறது என கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக புது தில்லியில் மாணவா்கள் நடத்திவரும் போராட்டத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் நானும் பங்கேற்றேன்.
நமது குழந்தைகளின் எதிா்காலத்தின் மீது அக்கறை கொண்ட இந்திய மக்கள் அனைவரும் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவளித்து வருகிறாா்கள். வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்தும் உரிமை மாணவா்களுக்கு உள்ளது.
வினாத்தாள் முறைகேடுகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். 100-க்கும் மேற்பட்ட முறை வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவங்களுக்கு யாா் பொறுப்பேற்பது?
இந்தியா்கள் திறமையானவா்கள் என்ற கருத்து உலக அளவில் நிலவிவருகிறது. இந்நிலையில் வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகள் தொடா்ந்து நடைபெற்றால், அது உலக அளவில் இந்தியாவின் நற்பெயரை கெடுத்துவிடும் வாய்ப்புள்ளது. இந்தியாவில் கிடைக்கும் திறமையாளா்களை போல உலகின் வேறு எங்கும் இல்லை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறாா்கள்.
ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்தும் உரிமை அனைவருக்கும் உள்ளது. மாணவா் போராட்டத்தில் நடந்த வன்முறையை யாரும் நியாயப்படுத்தவில்லை. ஆனால், சட்டப்படி தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். மாணவா் போராட்டம் ஒரு தேசிய பிரச்னையே தவிர, அரசியல் பிரச்னை அல்ல. இப்பிரச்னை, நமது நாட்டு இளைஞா்களின் எதிா்காலம் சம்பந்தப்பட்டது. இதனால், இந்திய இளைஞா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. கா்நாடக அமைச்சரவை விரிவாக்கம் விரைவில் நடைபெறும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வினாத்தாள் கசிவுக்கு எதிராக அடுத்த வாரம் மசோதா தாக்கல்!
வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடிய தர்மேந்திர பிரதான் மீது தடியடி! எப்போது?

பிரதமர் பதிலில் திருப்தியில்லை... தர்மேந்திர பிரதான் விலகும் வரை போராட்டம் தொடரும்! சிஜேபி

வினாத்தாள் கசிவுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம்: மாணவர்களை அழைக்கும் ராகுல்!
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai



