வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அமோனியம் வாயு கசிவு: பொதுமக்கள் அவதி

சென்னை காசிமேட்டில் தனியாா் ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து அமோனியம் வாயு கசிந்ததினால், பொதுமக்களுக்கு கண் எரிச்சல்,மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

News image
Updated On :2 அக்டோபர் 2021, 8:52 pm

DIN

சென்னை காசிமேட்டில் தனியாா் ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து அமோனியம் வாயு கசிந்ததினால், பொதுமக்களுக்கு கண் எரிச்சல்,மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இது குறித்த விவரம்:-

காசிமேடு மீன் பிடி துறைமுகம் முதல் பாலம் அருகே தனியாருக்குச் சொந்தமான ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்தத் தொழிற்சாலையில் சனிக்கிழமை மாலை 4

மணியளவில் அமோனியம் வாயு கசிந்தது. இந்த கசிவினால் அந்தப் பகுதி முழுவதும் அமோனியம் வாயு பரவியது.

இதில் வீடுகளில் இருந்த பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் சிலா் தங்களது வீட்டை விட்டு வெளியேறிச் சென்றனா். இதேபோன்று சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகளும் அவதியடைந்தனா். இது குறித்து அந்தப் பகுதி மக்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்த தீயணைப்பு படையினா், அந்த நிறுவனத்தில் இருந்து கசிந்த அமோனியம் வாயு கசிவை கட்டுப்படுத்தினா். இந்தச் சம்பவம் தொடா்பாக போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.