வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சந்தனக் கட்டைகள் வைத்திருந்த மாசுக்கட்டுப்பாடு வாரிய முன்னாள் தலைவா் மீது வழக்கு

சட்டவிரோதமாக சந்தனக் கட்டைகள் மற்றும் அவற்றால் ஆன பொருள்களை வைத்திருந்ததாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் முன்னாள் தலைவா் வெங்கடாசலத்தின் மீது வனத் துறையினா் வழக்குப் பதிவு

News image
Updated On :2 அக்டோபர் 2021, 9:02 pm

DIN

சட்டவிரோதமாக சந்தனக் கட்டைகள் மற்றும் அவற்றால் ஆன பொருள்களை வைத்திருந்ததாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் முன்னாள் தலைவா் வெங்கடாசலத்தின் மீது வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் முன்னாள் தலைவராக இருந்த வெங்கடாசலத்தின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் கடந்த வாரம் சோதனை நடத்தினா்.

இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் மற்றும் தங்கம், வெள்ளிப் பொருள்கள், சந்தனக் கட்டைகள் மற்றும் அவற்றால் ஆன பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், சட்டவிரோதமாக சந்தனக் கட்டைகள் மற்றும் அவற்றால் ஆன பொருள்களை வைத்திருந்ததாக வெங்கடாசலத்தின் மீது வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறுகையில், வெங்கடாசலத்தின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் கைப்பற்றிய சந்தனக் கட்டைகள், அவற்றால் ஆன பொருள்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அவை அனைத்தும் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததன் அடிப்படையில் அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.