புதுச்சேரி: புதுச்சேரியில் காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி கடற்கரை சாலையில் உள்ள காந்தியின் சிலைக்கு துணைநிலை ஆளுநர், முதல்வர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 153 ஆவது பிறந்த நாளையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வம் மற்றும் அமைச்சர்கள் க.லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார், சாய் சரவணகுமார் மற்றும் எம்எல்ஏக்கள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மும்மத பிரார்த்தனைகள் மற்றும் தேசப்பக்தி பாடல்களும் இசைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து புதுச்சேரி காமராஜர் சதுக்கத்தில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு , காமராஜரின் 46 ஆவது நினைவு தினத்தையொட்டி அண்ணா சாலை-காமராஜர் சாலை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் என்.ரங்கசாமி, சட்டபேரவைத் தலைவர் ஆர்.செல்வம் ஆகியோர் மலர் தூவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானின் போர்நிறுத்தம் இங்கு பொருந்தாது..! லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 182 பேர் பலி!

மீண்டும் ஒரு காதல் படத்தில் தனுஷ் - ஆனந்த் எல். ராய் - க்ரித்தி சனோன்?

🔴கேரளம்: இதுவரை நடந்திராத தேர்தல் சாதனை என்ன? செய்திகள் உடனுக்குடன்!
தனுஷ் நடிப்புப் பல்கலைக்கழகம்: மமிதா பைஜூ
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


