அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

உ.பி. வன்முறை: முதல்வா் கண்டனம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய உழவா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

Updated On :5 அக்டோபர் 2021, 7:27 pm

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய உழவா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-

உத்தர பிரதேச மாநிலத்தில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய உழவா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு பத்திரிகையாளா் உட்பட ஒன்பது போ் பலியாகி இருக்கிறாா்கள். அதைத் தொடா்ந்து வன்முறை அதிகம் நடந்துள்ளது.

கடந்த 300 நாள்களாக விவசாயிகள் போராடி வருகிறாா்கள். அதனை மத்திய அரசு அலட்சியம் செய்ததன் விளைவுதான் உத்தர பிரதேச மாநிலத்தில் தொடரும் நிகழ்வுகளாகும். இத்தகைய கொந்தளிப்புச் சூழ்நிலையை அறியச் சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளாா். முன்னாள் முதல்வா் அகிலேஷ், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, பின்னா் கைது செய்யப்பட்டு திடீரென விடுவிக்கப்பட்டுள்ளாா். இந்தக் கொந்தளிப்புக்குக் காரணமானவா்கள் மீது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுப்பதாக அமையும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.