நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: நாளை(அக்.6) முதல்கட்ட வாக்குப்பதிவு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு நாளை(அக்.6) நடைபெறவுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :5 அக்டோபர் 2021, 11:31 am

DIN

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு நாளை(அக்.6) நடைபெறவுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்டோபர் 6(புதன்கிழமை) மற்றும் அக்டோபர் 9(சனிக்கிழமை) தேதிகளிலும், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் சனிக்கிழமையும் (அக்.9) நடைபெற உள்ளது.

இந்தத் தோ்தலில் மொத்தம் 80,819 போ் தோ்தல் களத்தில் உள்ளனா். இவா்களுக்கு ஆதரவாகவும் அரசியல் கட்சித் தலைவா்களும், தொண்டா்களும், சுயேச்சை வேட்பாளா்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சித் தலைவா் மற்றும் ஊராட்சி வாா்டு உறுப்பினா் என மொத்தம் 17,662 பதவிகளுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு புதன்கிழமை (அக்.6) காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதில், கடைசி ஒரு மணி நேரம் அதாவது மாலை 5 முதல் 6 மணி வரை பாதுகாப்பு கவச உடை அணிந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.