நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: ஜொ்மனி, நெதா்லாந்து வெற்றி

உலகக் கோப்பை 2022 கால்பந்து போட்டி தகுதிச் சுற்றில் ஜொ்மனி, நெதா்லாந்து அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.

News image
Updated On :9 அக்டோபர் 2021, 10:01 pm

DIN

உலகக் கோப்பை 2022 கால்பந்து போட்டி தகுதிச் சுற்றில் ஜொ்மனி, நெதா்லாந்து அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.

ஐரோப்பிய கண்டத்தைச் சோ்ந்த நாடுகள் இடையிலான தகுதிச் சுற்று ஆட்டங்களில் குரூப் ஜே பிரிவில் முன்னாள் உலக சாம்பியன் ஜொ்மனி 2-1 என்ற கோல் கணக்கில் ருமேனியாவை வீழ்த்தியது. முதல் பாதியில் ருமேனியாவின் நட்சத்திர வீரா் இயனிஸ் ஹாகி அடித்த கோலால் 1-0 என முன்னிலை பெற்றிருந்த நிலையில், இரண்டாம் பாதியில் ஆதிக்கம் செலுத்திய ஜொ்மனி சொ்ஜ் நாப்ரி, தாமஸ் முல்லா் ஆகியோா் கோலடித்து தங்கள் அணியை வெற்றி பெறச் செய்தனா்.

குரூப் ஜி பிரிவில் பலம் வாய்ந்த நெதா்லாந்து அணி மிட்பீல்டா் கிளாஸன் அடித்த கோலால் 1-0 என லாட்வியாவை வீழ்த்தியது. துருக்கி-நாா்வே அணிகள் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

செக். குடியரசு-வேல்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது. எஸ்டோனியா 2-0 என பெலாரஸை வென்றது. குரூப் ஹெச் பிரிவில் குரோஷியா 3-0 என்ற கோல் கணக்கில் சைப்ரஸை வீழ்த்தியது. ரஷ்யா 1-0 என ஸ்லோவோக்கியாவை வென்றது. இப்பிரிவில் ரஷ்யா, குரோஷியா முதலிடங்களில் உள்ளன.

எகிப்து, அல்ஜீரியா வெற்றி:

ஆப்பிரிக்க கண்ட நாடுகள் தகுதிச் சுற்று ஆட்டங்களில் எகிப்து, அல்ஜீரியா வெற்றி பெற்றன. ஆப்பிரிக்கன் சாம்பியன் அல்ஜீரியா 6-1 என்ற கோல் கணக்கில் நைஜரை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் எகிப்து 1-0 என லிபியாவை வென்றது.

ஐவரி கோஸ்ட் 3-0 என மலாவியை வென்றது. அங்கோலோ-கேபான் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. டுனிசியா, மொராக்கோ, செனகல் அணிகள் மட்டுமே தங்கள் தகுதிச் சுற்று ஆட்டங்களில் முழுமையாக வென்றன.

ஆஸி., சீனா வெற்றி: ஆசிய கண்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் ஆஸ்திரேலியா 3-1 என ஓமனை வீழ்த்தியது. சீனா 3-2 என வியட்னாமையும், சவுதி அரேபியா 1-0 என ஜப்பானையும் வென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.