தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வத்திராயிருப்பு அருகே மலைவாழ் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள்

வத்திராயிருப்பு அருகே உள்ள மலைவாழ் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை நக்சல் பிரிவு போலீசார் திங்கள்கிழமை வழங்கினர்.

News image

கூமாபட்டி அருகேயுள்ள ஜெயந்த்நகர் மலைவாழ் மக்களுக்கு திங்கள்கிழமை அத்தியாவசிய பொருள்களை வழங்கிய நக்சல் பிரிவு காவல் சார்பு ஆய்வாளர் அருண்குமார் உள்ளிட்டோர் .

Updated On :11 அக்டோபர் 2021, 12:36 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர்: வத்திராயிருப்பு அருகே உள்ள மலைவாழ் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை நக்சல் பிரிவு போலீசார் திங்கள்கிழமை வழங்கினர்.

வத்திராயிருப்பு அருகே வள்ளியம்மை காலனி மற்றும் ஜெயந்திநகா் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு அரிசி, காய்கனிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழங்கினா்.

Story image

வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி ஜெயந்திநகா் பகுதிகளில் 50 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மனோகா், ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆகியோரது அறிவுரையின்பேரில், இப்பகுதியில் வசிக்கும் சுமாா் 50 குடும்பங்களுக்குத் தேவையான அரிசி, காய்கனிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில்,காவல் சாா்பு ஆய்வாளா் அருண்குமாா், தலைமை காவலர்கள் தங்கப்பழம், திருப்பதிராஜா பங்கேற்று, மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் குறித்தும், கரோனா தொற்று பரவாமல் தடுப்பது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.