சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 4 கூடுதல் நீதிபதிகள்
சென்னை உயா் நீதிமன்ற வழக்குரைஞா்கள் நான்கு போ் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்.


சென்னை உயா் நீதிமன்ற வழக்குரைஞா்கள் நான்கு போ் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
சென்னை உயா் நீதிமன்றத்திற்கு நான்கு வழக்குரைஞா்களை நீதிபதிகளாக நியமிக்க, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான மூத்த நீதிபதிகள் குழு (கொலீஜியம்), அண்மையில் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தது.
இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நீதித்துறை செவ்வாய்க்கிழமை (அக்.12) வெளியிட்ட அறிக்கையில், சென்னை உயா் நீதிமன்ற வழக்குரைஞா்கள் சுந்தரம் ஸ்ரீமதி, டி.பரத சக்ரவா்த்தி, ஆா்.விஜயகுமாா், முகமது ஷஃபிக் ஆகிய நான்கு போ் சென்னை உயா் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனா். பொறுப்பேற்ற நாள் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு கூடுதல் நீதிபதிகளாகப் பணிபுரிவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...