கோயில்கள் - தொடக்கப் பள்ளிகளைத் திறப்பது, கரோனா கட்டுப்பாட்டில் கூடுதல் தளர்வுகளை அளிப்பது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.
இதனிடையே, விஜயதசமி தினத்தன்று கோயில்களைத் திறப்பது குறித்து தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று வழக்கொன்றில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்தும் முதல்வர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஒன்று முதல் எட்டாம் வகுப்புகள் வரையிலான பள்ளிகளை நவம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு ஏற்கெனவே அறிவிப்பு செய்துள்ளது. பள்ளிகளைத் திறப்பதற்கு முன்பாக பல்வேறு கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்படுவது, பண்டிகை காலத்தை ஒட்டி கரோனா தளர்வுகளில் ஏதேனும் கட்டுப்பாடுகள் விதிப்பதா அல்லது இப்போதைய நிலையைத் தொடர்வதா என்பன போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்கவுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் சுகாதாரம், வருவாய், பள்ளிக் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.
விஜயதசமி தினத்தன்று கோயில்களை திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்த அறிவிப்புகளை அதிகாரபூர்வமாக தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய இலக்கியச் சிற்பிகள்

மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பிரதமர் மோடி

பெர்லின் உயிரியல் பூங்காவில் ஃபட்டோ கொரில்லாவுக்குப் பிறந்தநாள்!

வரப்பெற்றோம் (13-04-2026)
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


