தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (12.10.2021) தலைமைச் செயலகத்திலிருந்தும், காணொலிக் காட்சி வாயிலாக புது தில்லியிலிருந்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் மற்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணை அமைச்சர் ஜென்ரல் வி.கே. சிங் ஆகியோர் முன்னிலையிலும், தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை தளவாடங்கள் மேலாண்மை நிறுவனம், சென்னை துறைமுகம் ஆகியவை இணைந்து, பொது மற்றும் தனியார் பங்களிப்புடன், திருவள்ளூர் மாவட்டம், மப்பேட்டில் 1200 கோடி ரூபாய் முதலீட்டில் “பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா” தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.