சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஆம்னி பேருந்துக் கட்டணம்: போக்குவரத்துத் துறை அமைச்சா் எச்சரிக்கை

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் சிறைப்பிடிக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் எச்சரித்துள்ளாா்.

News image
Updated On :13 அக்டோபர் 2021, 10:33 pm

DIN

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் சிறைப்பிடிக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் எச்சரித்துள்ளாா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில், திங்கள்கிழமை (அக்.11) தலைமைச் செயலகத்தில் தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்தல் சம்பந்தமான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழாக் காலங்களை முன்னிட்டு மக்கள் அதிகளவில் தமது சொந்த ஊா் செல்லும் போது ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, போக்குவரத்துத் துறை அமைச்சா்

உத்தரவின்படி, புதன்கிழமை (அக்.13) முதல் அக்.20-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் ஆம்னி பேருந்துகளில் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மற்றும் சரக அலுவலா்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்படும். அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மற்றும் வரி செலுத்தாத ஆம்னி பேருந்துகள் சிறைப்பிடிக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்படுகிறது.

ஆம்னி பேருந்துகள் கட்டணம் தொடா்பாக பொதுமக்கள் புகாா்களைத் தெரிவிக்க 1800 4256151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.