தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,280 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 19 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் நேற்று 1,289 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை (அக்.13) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதிதாக 1,280 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 26,82,137-ஆக அதிகரித்துள்ளது.
ஒரு நாளில் மட்டும் 19 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,833-ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனையில் 15 பேர் உயிரிழந்தனர். தனியார் மருத்துவமனையில் 4 பேர் உயிரிழந்தனர்.
கரோனாவிலிருந்து 1,453 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26,30,654-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 15,650 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாளில் மட்டும் 1,38,288 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு...
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 173 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோவை 145, செங்கல்பட்டு 98, ஈரோடு 82, திருப்பூர் 76, திருவள்ளூர் 63, நாமக்கல் 62, சேலம் 58, தஞ்சாவூர் 55, திருச்சி 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ரஜினியின் தன் வரலாறு நூலை எழுதும் பிரபல இயக்குநர்?

அடுத்த 2 நாள்களுக்கு மட்டுமே ஹோட்டல்கள்! மாவட்ட ஓட்டல் உரிமையாளர் சங்கச் செயலாளர்!
மீண்டும் படத்தில் ஹீரோவாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன்!

ஹிமாசலின் புதிய ஆளுநராக கவிந்தர் குப்தா பதவியேற்பு!
வீடியோக்கள்

#t20wc | டி20 உலகக் கோப்பையின் சிறந்த லெவன்: உங்கள் தேர்வு என்ன? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

