தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நாகை மீனவர்கள் 23 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிப்பு

நாகையிலிருந்து 2 விசைப் படகுகளில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 23 பேர் இலங்கைக் கடற்படையினரால் புதன்கிழமை இரவு சிறைபிடிக்கப்பட்டனர். 

News image
கோப்புப்படம்
Updated On :14 அக்டோபர் 2021, 5:48 am

DIN

நாகப்பட்டினம்: நாகையிலிருந்து 2 விசைப் படகுகளில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 23 பேர் இலங்கைக் கடற்படையினரால் புதன்கிழமை இரவு சிறைபிடிக்கப்பட்டனர். 

நாகை, அக்கரைப்பேட்டை, திடீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் இ.சிவக்குமார்(48). இவரது சகோதரர் சிவனேசன் (42). இவர்களுக்குச் சொந்தமான இரு விசைப் படகுகளில் நாகை அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டை, ஆர்யநாட்டுத் தெரு மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் சந்திரப்பாடி, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 23 பேர் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

கடந்த 11-ஆம் தேதி நாகை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்புக்குப் புறப்பட்ட அவர்கள், புதன்கிழமை இரவு இலங்கை, பருத்தித்துறைக்கு தென்கிழக்கே சுமார் 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 23 பேரும், வியாழக்கிழமை காலை இலங்கை, காரைநகர் துறைமுகத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர். அங்கு, மீனவர்களுக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், அவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, சட்ட நடவடிக்கைகளுக்கு உள்படுத்தப்படுவர் எனக் கூறப்படுகிறது.

மீட்கக் கோரிக்கை..
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 23 பேரையும், விசைப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.