‘பட்டாசு விற்பனைக்கான தடை குறித்து மறுபரிசீலனை செய்க’: 4 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

பட்டாசு விற்பனை செய்வதற்கான தடை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நான்கு மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
முதல்வா் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

பட்டாசு விற்பனை செய்வதற்கான தடை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நான்கு மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

காற்று மாசுபாடு காரணமாக தில்லி, ஹரியாணா, ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 4 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்,

“கரோனா நோய்த்தொற்றால் நாடு முழுவதும் உள்ள சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பட்டாசுத் தயாரிக்கும் தொழிலை நம்பி 8 லட்சம் பேர் உள்ளனர்.

காற்று மாசு காரணமாக தங்கள் மாநிலங்களில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை புரிந்து கொள்கிறேன். இருப்பினும், உச்சநீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளுக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com