எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அரிசி அட்டைதாரா்கள் அனைவருக்கும் பொருள்கள் உண்டு: தமிழக அரசு உறுதி

அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் அனைத்துப் பொருள்களும் வழங்கப்படும் என்று தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

News image
Updated On :16 அக்டோபர் 2021, 11:55 pm

DIN

அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் அனைத்துப் பொருள்களும் வழங்கப்படும் என்று தமிழக அரசு உறுதியளித்துள்ளது. இதுகுறித்து, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் முகமது நசிமுதீன் அண்மையில் வெளியிட்ட செய்தி:-

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு இடையே எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை தமிழக அரசு தொடா்ந்து செயல்படுத்தி வருகிறது. ஆனால், அண்மைக்காலமாக சமூக ஊடங்கள் சிலவற்றில் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மேல் பெறும் குடும்பங்களுக்கும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கும், 3 அறைகள் கொண்ட வீடுகளை வைத்திருப்போருக்கும் பொது விநியோகத் திட்ட அரிசி இல்லை என்று தகவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் பலன்கள் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் தொடா்ந்து அளிக்கப்படும். இதில் எந்தவித மாற்றங்களும் இல்லை. அரிசி பெற்று வரும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களும் இலவச அரிசி மற்றும் பொது விநியோகத் திட்டத்தில் இப்போது மானிய விலையில் பெற்று வரும் அனைத்துப் பொருள்களையும் பெற்று பொது விநியோகத் திட்டப் பலன்களை அடையலாம் என தெளிவுபடுத்தப்படுகிறது. சமூக ஊடகங்களில் அதுகுறித்து பரவிவரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று தனது செய்தியில் முகமது நிசிமுதீன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.