கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசி, திருத்தங்கலில் அதிமுக பொன்விழா

சிவகாசி மற்றும் திருத்தங்கலில் அதிமுக பொன்விழா ஆண்டை ஒட்டி 21 இடங்களில் கட்சி கொடியை முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி .ராஜேந்திர பாலாஜி ஏற்றிவைத்தார்.

News image
Updated On :17 அக்டோபர் 2021, 7:28 am

DIN

சிவகாசி மற்றும் திருத்தங்கலில் அதிமுக பொன்விழா ஆண்டை ஒட்டி 21 இடங்களில் கட்சி கொடியை முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி .ராஜேந்திர பாலாஜி ஏற்றிவைத்தார்.

திருத்தங்கல், சிவகாசி, விருதுநகர் சாலையில் இரு இடங்களிலும் சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் சிவகாசியில் பராசக்தி காலனி பழைய நகராட்சி அலுவலகம் முன்பு உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவப்படங்களை கே.டி. ராஜேந்திர பாலாஜி மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கட்சிக் கொடியை ஏற்றினார்.

பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், திருத்தங்கல் அதிமுக நகரச் செயலாளர் சக்திவேல், நகர அவைத்தலைவர் கோயில்பிள்ளை, சிவகாசி அதிமுக நகரச் செயலாளர் அசன் பத்ருதீன், ஒன்றியச் செயலாளர்கள் பலராமன் கருப்பசாமி மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.